/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு திட்ட வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம்; பயனாளிகள் அணுக அறிவிப்பு
/
அரசு திட்ட வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம்; பயனாளிகள் அணுக அறிவிப்பு
அரசு திட்ட வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம்; பயனாளிகள் அணுக அறிவிப்பு
அரசு திட்ட வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம்; பயனாளிகள் அணுக அறிவிப்பு
ADDED : ஏப் 09, 2025 10:13 PM
உடுமலை; உடுமலை ஒன்றிய கிராமங்களில், அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கான மறுகட்டமைப்பு திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில், தாட்கோ உட்பட பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.
அதில், 2000 - 01ம் ஆண்டுக்கு முன்பு வரை கட்டப்பட்ட வீடுகளில், பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு மாநில அரசு முன்பு அறிவித்தது.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், அவ்வாறுள்ள வீடுகள் கொண்ட பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
ஒரு லட்சம் வீடுகள் இந்த பழுதுபார்க்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால், அந்த வீடுகளில் கள ஆய்வு மேற்கொண்ட போது, அவற்றை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் சிதிலமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், தற்போது மாநில அரசு கிராம ஊராட்சிகளில், அவ்வாறுள்ள வீடுகளை மீண்டும் பட்டியலிட்டு, அவற்றை மறுகட்டமைப்பு செய்வதற்கு அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்துக்கு, ஒரு வீட்டை மறுகட்டமைப்பு செய்வதற்கு, தலா 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் பயனாளிகளை தேர்வு செய்கின்றனர். உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் தேர்வு நடக்கிறது.
இதன்படி ஊராட்சிகளில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட சாய்தள கான்கிரீட் தொகுப்பு வீடுகள், ஒட்டுவில்லை வீடுகள், மிகவும் பழுதடைந்த பயன்படுத்த முடியாத வீடுகள் மறுகட்டமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த அரசு திட்ட வீடுகள் மறுகட்டமைப்பு செய்வதற்கு, தகுதியுள்ள பயனாளிகள் பட்டா அல்லது பத்திர நகல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி புத்தகங்கள் உள்ளிட்டவற்றுடன் அந்தந்த ஊராட்சி நிர்வாக அலுவலகங்களை அணுகுவதற்கும் ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.