/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கதை சொல்லி அசத்திய அரசு அலுவலர்கள்
/
கதை சொல்லி அசத்திய அரசு அலுவலர்கள்
ADDED : மே 06, 2025 06:36 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்வார விழா, கடந்த ஏப்., 29ல் துவங்கி நடைபெற்றுவந்தது. அரசு அலுவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நிறைவுநாளான நேற்று, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு அலுவலர்களுக்கான குறிப்புகள், வரைவுகள் எழுதும் போட்டி, கதை சொல்லும் போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு அலுவலர்கள், தமிழ் சிறுகதைகள் சொல்லி அசத்தினர்.
குறிப்பு, வரைவுகள் எழுதும் போட்டியில், முதுநிலை ஆர்.ஐ., சத்திய செல்வி முதலிடம்; மாவட்ட திட்டமிடும் அலுவலக உதவியாளர் தங்கராஜ் இரண்டாமிடம்; முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் மோகன்ராஜ் மூன்றா மிடம் பிடித்தனர்.
கதை சொல்லும் போட்டியில், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலக உதவியாளர் மோகனசுந்தரி முதலிடம்; புள்ளியியல் அலுவலர் நாராயணன் இரண்டாமிடம்; மேற்பார்வை பொறியாளர் அலுவலக கணக்கு மேற்பார்வையாளர் சாமுவேல்ஜான்சன் மூன்றாமிடம் பிடித்தனர்.
கலை நிகழ்ச்சிகளில், நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் கயல்விழி முதலிடம்; புள்ளியியல் அலுவலர் நாராயணன் இரண்டாமிடம்; கணக்கு மேற்பார்வையாளர் சாமுவேல் ஜான்சன் மூன்றாமிடம் பிடித்தனர். பாரதி தாசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்ற அரசு அலுவலர்களுக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ், புத்தகங்கள் பரிசளித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.