/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போக்குவரத்து கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது' :அரசு பஸ் டிரைவர்களுக்கு உத்தரவு

ADDED : ஜன 31, 2024 01:01 AM

திருப்பூர்:'அனைத்து டிரைவர்களும் தாங்கள் பணி முடிந்து பஸ்சை கிளையினுள் நிறுத்தும் போது, தவறாமல் பதிவேட்டில் பஸ்சில் உள்ள குறைகளை பதிவிட வேண்டும்,' என, அரசு பஸ் டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை - 2 வளாகத்தில், பஸ்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம் அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
சமீபத்தில் நமது கிளைகளை ஆய்வு செய்கையில், பஸ்களில் ஏற்படும் குறைபாடுகளை பஸ் தினசரி பராமரிப்பு பதிவேட்டில் டிரைவர்கள் எழுதாதது தெரிய வருகிறது. இதனால், பஸ்களில் உள்ள குறைபாடு தெரியாமலும், சரிசெய்யப்படாமலும், பஸ்கள் வழித்தடத்துக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது.
'பிரேக் டவுன்' ஏற்பட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை தவிர்த்திட ஒவ்வொரு டிரைவரும் பஸ் பயணம் முடித்து கிளையினுள், பஸ்ஸை நிறுத்தும் போது, பஸ்சில் உள்ள மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், உள்ளிட்ட பிற குறைபாடுகளை பஸ்களின் தினசரி பராமரிப்பு பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.