/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளை தயாராக வைத்திருக்க உத்தரவு
/
அரசு பள்ளிகளை தயாராக வைத்திருக்க உத்தரவு
ADDED : மே 26, 2025 10:51 PM
உடுமலை, ; உடுமலை கோட்டத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கு வகுப்பறைகளை தயாராக வைப்பதற்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உடுமலை கோட்டத்துக்குட்பட்ட உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் உள்ள துவக்கம் முதல் மேல்நிலை வரை, 328 அரசு பள்ளிகள் உள்ளன.
பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
அரசு துவக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, மே துவங்கியதிலிருந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை துவங்கி இருபது நாட்களுக்கும் மேலாகிறது. புதிய கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் வாரம் துவங்குகிறது.
மாணவர்கள் வரும் முன்பு, பள்ளிகள் தயாராக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'வகுப்பறைகளை துாய்மைப்படுத்துவது, மின்சார இணைப்புகளை சரிபார்ப்பது, கழிப்பறை, குடிநீர் வசதிகளை தயாராக வைப்பதற்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி இம்மாத இறுதியில், பள்ளிகளில் துாய்மைப்பணிகளும் மேற்கொள்ளப்படும்' என்றனர்.