/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்மாதிரி ஊராட்சிகளை உருவாக்க அரசு திட்டம்
/
முன்மாதிரி ஊராட்சிகளை உருவாக்க அரசு திட்டம்
ADDED : நவ 12, 2024 09:16 AM
திருப்பூர்; தமிழகத்தில், கிராம ஊராட்சிகளை 'முன்மாதிரி ஊராட்சி'களாக மாற்றும் வகையில், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், வரும், 23ம் தேதி கிராம சபா நடத்த ஊராட்சி வளர்ச்சி இயக்குனர் உத்தரவிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய ஊராட்சிகள், 'ODF Plus -Aspiring' என வகைப்படுத்தப்பட்டு, பின், அந்த ஊராட்சிகள் 'நிலையான திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சி' என்ற நிலையை தக்க வைக்க வேண்டும்; இது, 'ODF Plus' வகைப்பாடுக்குள் கொண்டு வரப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, கிராம ஊராட்சிகளில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை வசதி கொண்ட கிராம ஊராட்சிகள், தங்களை பணியில் முழு கவனம் செலுத்தி, 'ODF Plus -Aspiring' என்ற நிலையையும், பின், 'ODF Plus Rising' என்ற நிலையையும் எட்ட வேண்டும். அதன் தொடர்ச்சியாக, 'ODF Plus Model Village' என்ற நிலையை அடைந்த பின், 'அனைத்து இலக்குகளையும் எட்டிய கிராம ஊராட்சி' என்ற வகைபாட்டிற்குள் வந்து விட வேண்டும். வரும் கிராம சபையில், 'அந்த ஊராட்சியின் தகுதியை வரையறை செய்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.