ADDED : பிப் 10, 2025 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :   திருப்பூர், தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார்.
மாநில, மாவட்ட கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பாராட்டு சான்றிதழ், பரிசு பொருள் வழங்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், உகாயனுார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரேவதிகனகராஜ், ஹிந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகநாதன், முன்னாள் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, திருப்பூர் விஷன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை மதினாபேகம் நன்றி கூறினார்.

