/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
/
அரசு பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
ADDED : ஜன 28, 2025 10:25 PM

உடுமலை,; குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் ஷகீலாகுமாரி முன்னிலை வகித்தார்.
குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், குடிமங்கலம் தலைமையாசிரியர் பழனிச்சாமி, முன்னாள் மாணவர் சங்கத்தினர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
பேச்சாளர் சரவணன் சொற்பொழிவு நிகழ்த்தினார். பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இலக்கிய மன்றம், கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தனியார் கல்வி நிறுவன தாளாளர் சதீஷ்கண்ணன் பரிசுகள் வழங்கினார்.
கிராமிய பாடகி பொன்னுத்தாய், பாட்டு பாடி கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் செல்வமணி, மாரிமுத்து ஒருங்கிணைத்து வழங்கினர்.