/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பரத நாட்டியத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவியர்
/
பரத நாட்டியத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவியர்
ADDED : நவ 11, 2025 11:10 PM

திருப்பூர்: பள்ளிக் கல்வித்துறை சார்பில், பசுமையும், பாரம்பரியமும் என்ற தலைப்பில் துவக்கப்பள்ளி அளவிலான மாணவ, மாணவியருக்கான கலை திருவிழா போட்டி, ஜெய்வாபாய் மற்றும் நஞ்சப்பா பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில், திருப்பூர், வெங்கமேடு மாநகராட்சி துவக்கப்பள்ளி மாணவியர் குழு பரத நாட்டியம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு பிரிவில், முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள், வரும் 25ம் தேதி கரூரில் நடைப்பெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமணி, பரிசுகள் வழங்கி பாராட்டி உள்ளார். ஆசிரியர் அன்டொய்னி சந்தான மேரி, மாணவியருக்கு பரதம் கற்று கொடுத்துள்ளார்.
பரதநாட்டியத்திற்கு தேவையான உடை உள்ளிட்ட செலவுகளை, அப்பள்ளி ஆசிரியர்களே செய்து கொள்கின்றனர். மாணவியரின் வெற்றிக்கு, பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பே காரணம். மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைப்பர் என்கின்றனர் ஆசிரியர்கள் நம்பிக்கையுடன்.

