/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவியர் கலைத்திருவிழாவில் கலக்கல்
/
அரசு பள்ளி மாணவியர் கலைத்திருவிழாவில் கலக்கல்
ADDED : நவ 09, 2024 12:39 AM

பல்லடம்; வட்டார அளவிலான பரதநாட்டிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற கேத்தனுார் அரசு பள்ளி மாணவியரை ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் சமீபத்தில் நடந்தன. பொங்கலுார் வட்டாரத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர். கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியர் ஹரிணி, சாதனா, வர்ஷினி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணிவி சஞ்சனா, பிரதிக் ஷா ஆகியோர் குழு பரதநாட்டிய போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவியர் அனைவரும், அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க உள்ளனர். கேத்தனுார் பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் உட்பட, பரதநாட்டிய பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.