நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : தமிழகம் முழுவதும் கடந்த பிப்., மாதம் 22ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு மாணவர் களுக்கு தேசிய திறனாய்வுத்தேர்வு நடந்தது.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் 63 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். பெருமாநல்லுார் அடுத்த அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் மகாஹரிணி, பிரதிமா, தன்வி, லித்திஸ், தம்பியண்ணன் ஆகிய ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்ட அளவில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளியாக இது முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக ஆசிரியர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேலாண்மை குழுவினர் பாராட்டினர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.