/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!
/
கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!
கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!
கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!
ADDED : ஏப் 21, 2025 11:17 PM

திருப்பூர்:
கோடை விடுமுறை நாட்களில் அரசுப்பள்ளி வளாகங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த, 17ம் தேதி ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து, துவக்கப் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டன. நாளை மறுதினம் (24ம் தேதி) முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கு தேர்வு முடிந்து, நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள் வரும், 30ம் தேதி வரை பள்ளிக்கு வருகை தர வேண்டும்; அட்மிஷன் பணிகளை கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறை விடப்படும்போது பாதுகாப்பு எப்படி என்பது புறநகரப் பள்ளிகள் பலவற்றில் கேள்விக்குறியாக உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்து மாலையில் திரும்புகின்றனர்; தொடர் விடுமுறை நாட்களில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைபவர்களும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரும் அதிகமாக உள்ளனர்.
சில துவக்கப்பள்ளிகளில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள், தலைமையாசிரியர் அறை, முகப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளியின் பின்பக்க சுவர் தாண்டி, கிடைக்கும் வழிகளில் எல்லாம் பள்ளிக்குள் ஏறி குதித்து உள்ளே வருகின்றனர் பலர். பள்ளி சொத்துக்களை சேதப்படுத்துவதோடு, கையில் கிடைக்கும் பொருட்களை திருடியும் செல்கின்றனர்.
தற்போது துவக்க பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ், கம்ப்யூட்டர், 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. பாதுகாவலர்கள் இல்லாததால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள காலை, மாலை பலர் பள்ளிக்கு வந்தாலும், நேரம் முடிந்த பின் சென்று விடுகின்றனர்.