/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவி தேசிய போட்டிக்கு தகுதி
/
அரசு பள்ளி மாணவி தேசிய போட்டிக்கு தகுதி
ADDED : ஜன 09, 2025 11:39 PM

திருப்பூர்; கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி பிருந்தாஸ்ரீ, உ.பி.,யில் நடக்கும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
விழுப்புரத்தில் மாநில தடகள போட்டி நடந்தது. இதில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி, பிருந்தாஸ்ரீ பங்கேற்று, நான்கு கி.மீ., தனிநபர் ஓட்ட போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றார். இதன் மூலம் வரும், 12 ம் தேதி, உ.பி., மாநிலம் மீரட்டில், அத்லெடிக் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்தும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். மாநில போட்டியில் வெற்றி பெற்று, தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவியை, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பயிற்சியாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.