/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி
/
அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி
ADDED : நவ 29, 2024 07:07 AM

திருப்பூர்; கேரம் போட்டியில், இரண்டாவது முறையாக மாநில போட்டிக்கு தகுதி பெற்ற அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.
இதில், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி கவுசிகா, 14 வயது பிரிவில் முதலிடம் பெற்றார்.இவர், அடுத்தாண்டு ஜன., மாதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.
இரண்டாவது ஆண்டாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதித்த மாணவியை பள்ளி தலைமையாசிரியர் சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.