/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட ஹாக்கி போட்டி; அரசு பள்ளி வெற்றி
/
மாவட்ட ஹாக்கி போட்டி; அரசு பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 28, 2025 09:16 PM

உடுமலை; தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது.
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், திருப்பூர் மாவட்ட அளவில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஹாக்கி போட்டி குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முதல் நாள் லீக் போட்டியில் 'ஏ' பிரிவில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 'பி' பிரிவில் லுார்துமாதா மெட்ரிக் பள்ளி அணிகளும் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் மூத்தோர் பன்னாட்டு தடகள வீரர் மனோகரன், தன்னார்வலர் பிரதீப் பரிசுகளை வழங்கினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் செய்திருந்தார்.