/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கலைத்திருவிழாவில் ஜொலிக்கப் போகும் அரசு பள்ளிகள்
/
மாநில கலைத்திருவிழாவில் ஜொலிக்கப் போகும் அரசு பள்ளிகள்
மாநில கலைத்திருவிழாவில் ஜொலிக்கப் போகும் அரசு பள்ளிகள்
மாநில கலைத்திருவிழாவில் ஜொலிக்கப் போகும் அரசு பள்ளிகள்
ADDED : நவ 09, 2025 12:21 AM

திருப்பூர்: மாநிலத்தின் கலையரசன், கலையரசி யார் என்பதை தேர்வு செய்வதற்கான, மாநில போட்டி வரும், 25ல் துவங்கி, 29 வரை நடக்கிறது.
இப்போட்டிக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட கலைத்திருவிழா கடந்த, 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் நடந்தது. வட்டார போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் குழுக்கள் பங்கேற்றனர். இவர்களில் முதலிடம் பெற்றவர்கள், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும், 25ம் தேதி கரூரில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு மாநில கலைத்திருவிழா போட்டி நடக்கிறது. 26ம் தேதி கிருஷ்ணகிரியில் ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கும், 27 மற்றும், 28ம் தேதி, சேலத்தில் ஒன்பது, பத்து மாணவருக்கும், புதுக்கோட்டையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கும் போட்டி நடக்கிறது.
திருப்பூரில் இருந்து மாநில போட்டிக்கு தேர்வானோர் விபரம் n ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு:
கதை கூறுதல் - கவிஸ்ரீ (படியூர்), களிமண் பொம்மை செய்தல் - ரிஷி (அனுப்பர்பாளையம்புதுார்), மாறுவேடப் போட்டி - ரிதன்யாஸ்ரீ (படியூர்), தமிழ் மழலையர் பாடல் ஒப்புவித்தல் - லசிஹாசினி (அனுப்பர்பாளையம்புதுார்), ஆங்கிலம் பாடல் ஒப்புவித்தல் - சரத்பாண்டி (வாமலைக்கவுண்டம்பாளையம்), வண்ணம் தீட்டுதல் - தன்விகா (துலுக்கவலசு).
n மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை:
பரத நாட்டியம் தனி - நேத்ராஸ்ரீ (சின்னவீரம்பட்டி), பரத நாட்டியம் குழு - (வெங்கமேடு), களிமண் பொம்மை செய்தல் - சர்வேஷ் (கோவில்பாளையம்), மாறுவேடப்போட்டி - மெர்வின் (காரணம்பேட்டை), மெல்லிசை தனிப்பாடல் - கிருத்திகாஸ்ரீ (கணக்கம்பாளையம்), நாட்டுப்புற நடனம் தனி - ரஷ்வினா (15 வேலம்பாளையம்), நாட்டுப்புற நடனம் குழு - (15 வேலம் பாளையம்).
பேச்சு போட்டி - சிபோரல் (பெருந்தொழுவு), தேச சக்தி பாடல்கள் - ஏகாம்பன் (ஊத்துக்குளி நகர்), திருக்குறள் ஒப்புவித்தல் - பூவிதாஸ்ரீ (அம்மாபாளையம்), தனிநபர் நடிப்பு - ஸ்ரீகரீஷ்மா (படியாண்டிபாளையம்), ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் - லோகபிரியன் (வெஞ்சமடை)
n ஆறு முதல் எட்டாம் வகுப்பு:
ரங்கோலி - ஐஸ்வர்யா (பெதப்பம்பட்டி), பாவனை நடிப்பு - சுதீப்குமார் (திம்மநாயக்கன்பாளையம்), பரத நாட்டியம் குழு - (சிறுபூலுவப்பட்டி). பரதநாட்டியம் தனி - ஸ்ரீஷா (15 வேலம்பாளையம்). களிமண் சுதை வேலைப்பாடு - தர்ஷன் (வெஞ்சமடை), மணல் சிற்பம் - கிேஷார் (நல்லுார்).
கிராமிய நடனம் - அனிலேகாஸ்ரீ - (சிறுபூலுவப்பட்டி). நாட்டுப்புற பாடல் - பூர்விதா (அல்லாளபுரம்), பலகுரல் பேச்சு - பூபாலன் (மாதேஸ்வரன்நகர்), செவ்வியல் இசை தனிப்பாட்டு - நிகிதா (பல்லடம்), தனிநபர் நடிப்பு - ஸ்ருதிகா (ஆத்துப்பாளையம்), வில்லுப்பாட்டு - நெருப்பெரிச்சல், ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் - ஷாலினி (கிழவன்காட்டூர்).
n ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு:
பொம்மலாட்டம் குழு - அரசு உயர்நிலைப்பள்ளி, கருகம்பாளையம், பாவனை நடிப்பு தனி (மைமிங்) - அப்துல்அஜீஸ் (பத்மாவதிபுரம்), பரத நாட்டியம் தனி - கவுதம் வாசுதேவன் (அனுப்பர்பாளையம்), பரத நாட்டியம் குழு - பெரியாயிபாளையம். டிரம்ஸ் - சஞ்சீவன் (கேத்தனுார்), புல்லாங்குழல் - திக் ஷா தர்ஷினி (எலையமுத்துார்), நாட்டுப்புற பாடல் தனி - வர்ஷா (பெருமாநல்லுார்).
இலக்கிய நாடகம் குழு - (மலையாண்டிபட்டணம்), கீ போர்டு - அருண்அண்ட்ரோஸ் - (பல்லடம்), காகிதக்கூழ் பொருள்கள் செதுக்குச் சிற்பம் - இந்த்ரேஷ்குமார் (காங்கயம்), களிமண் சிற்பம் - வர்ஷினி (உடுமலை), கேலிசித்திரம், வண்ணம் தீட்டுதல் - ஜெக்லின்ஷிபா (பூலுவப்பட்டி), மணல் சிற்பம் - ஷிவதர்ஷினி, (பூலுவப்பட்டி), நாட்டுப்புற நடனம் தனி - மதுப்பிரியா (கொடுவாய்), நாட்டுப்புற நடனம் குழு - ஜெய்வாபாய் பள்ளி, பறை - நிதர்சன் (பூலுவப்பட்டி).
பல குரல் பேச்சு - நகுல் (அவிநாசி), பிற வகை நடனம் தனி - பவித்ரா (தெக்கலுார்), குழு நடனம் - பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னத்துார், பானை ஓவியம் - பிரின்ஸ்சாமுவேல் (கேத்தனுார்), ரங்கோலி - பிரியங்காஜாஸ் (பழனியம்மாள் பள்ளி), செவ்வியல் இசை தனி - யாழினி (பல்லடம்), தெருக்கூத்து குழு - பூமலுார் பள்ளி, பூமலுார்.
தனிநபர் நடிப்பு - மஹதிஸ்ரீ (நெசவாளர்காலனி), வயலின் - பிரியங்கா (பி.வடுகபாளையம்), வீதி நாடகம் குழு - கருப்பகவுண்டம்பாளையம், வில்லுபாட்டு குழு - கே.எஸ்.சி., பள்ளி, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் - ஹரிஹர சுதன் ( நஞ்சப்பா பள்ளி).
n பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு:
பொம்மலாட்டம் குழு - மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, குமார்நகர், பாவனை நடிப்பு தனி - சந்தோஷ் (வெள்ளகோவில்), பரத நாட்டிய குழு - மோனிஷா (குன்னத்துார்), பரதநாட்டியம் தனி - மித்ரா (ஜெய்வாபாய் பள்ளி), புல்லாங்குழல் - ரேணுகா (புதுராமகிருஷ்ணாபுரம்), ஹார்மோனியம் - சஞ்சீவ் (கணபதிபாளையம்), இலக்கிய நாடகம் குழு - ஜெய்வாபாய், கீ போர்டு - தபஸ்ரீதரன் (தாராபுரம்).
கேலி சித்திரம் வரைதல் - வசுந்திரா (ஜெய்வாபாய்), களிமண் சிற்பம் - சங்கிலிநாதன் மாரியம்மன் (பொல்லிக்காளிபாளையம்), காகிதக்கூழ் பொருள்கள் செதுக்கு சிற்பம் - சம்ருதி (இடுவம்பாளையம்), மணல் சிற்பம் - தயாயினி (இடுவம்பாளையம்), நாட்டுப்புற நடனம் தனி - பிரித்திகா வர்ஷினி (குடிமங்கலம்), நாட்டுப்புற நடனம் குழு - ஜெய்வாபாய் பள்ளி.
நாட்டுப்புற பாடல் - திருக்குமரன் (பெருமாநல்லுார்), பறை - யாழினி (அய்யங்காளிபாளையம்), பலகுரல் பேச்சு - ஹஜ்ருல்அஸ்வத் (கே.எஸ்.சி.பள்ளி), பிற வகை நடனம் குழு - மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம், பிறவகை நடனம் தனி - ரீனா (பெருமாநல்லுார்), பானை ஓவியம் - தாரணி (பெருமாநல்லுார்), ரங்கோலி - நிவர்திகா (பொல்லிக்காளிபாளையம்).
செவ்வியல் இசை தனி - அபிநயா (ஜெய்வாபாய்), தெருக்கூத்து குழு - புதுராமகிருஷ்ணாபுரம் பள்ளி, தனிநபர் நடிப்பு - சூர்யா (நஞ்சப்பா பள்ளி), வீதி நாடகம் குழு - வீரபாண்டி மேல்நிலைப்பள்ளி, வில்லுப்பாட்டு குழு - ஜெய்வாபாய் பள்ளி. ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் - சிவசூர்யா (பெருந் தொழுவு).

