/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடகிழக்கு பருவமழை தாமதம்; கருகும் கால்நடை தீவனங்கள்
/
வடகிழக்கு பருவமழை தாமதம்; கருகும் கால்நடை தீவனங்கள்
வடகிழக்கு பருவமழை தாமதம்; கருகும் கால்நடை தீவனங்கள்
வடகிழக்கு பருவமழை தாமதம்; கருகும் கால்நடை தீவனங்கள்
ADDED : நவ 09, 2025 12:19 AM

பல்லடம்: குறித்த காலத்தில் பருவமழை பெய்யாமல் தாமதமாகி வருவதால், பல்லடம் வட்டாரத்தில், கால்நடை தீவனங்கள் காய்ந்து கருகி, வருகின்றன.
விவசாயிகள், விவசாயத் தொழிலுடன் கால் நடை வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருவாயை பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.
இதற்கிடையே, கால்நடைகளுக்கு ஏற்படும் தீவன செலவை குறைக்கும் வகையில், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை பயன்படுத்துகின்றனர்.
இதற்காக, சோளத்தட்டுகளை சேகரித்து வைத்து, ஆண்டுதோறும் பயன்படுத்துவதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு, சோளத்தட்டுகள் சேகரித்து வைக்கப்பட்டு, அவை தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன.
சமீப நாட்களாக, பருவமழை குறித்த காலத்தில் பெய்யாததாலும், மழை குறைவாலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, தீவனங்கள் காய்ந்து கருகி வருகின்றன.
இது குறித்து பல்லடத்தை அடுத்த மாதப்பூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி கூறியதாவது: கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்காக, மஞ்சள் சோளம் விதைத்து, அவற்றின் சோளத்தட்டுகளை உலர்த்தி, தீவனமாக பயன்படுத்துகிறோம்.
ஏக்கருக்கு, 60, 70 கத்தைகள் கிடைக்கும். 10 முதல் 12 கத்தைகள் கொண்ட சோளத்தட்டு உருளை ஒன்று, 200 முதல் 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
தற்போது, போதிய அளவு மழை கிடைக்காமலும், குறித்த காலத்தில் பருவமழை பெய்யாததாலும், விதைத்த மஞ்சள் சோள தட்டுகள், தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகின்றன. ஒரு நாள் மழை பெய்தாலும், அவை துளிர்ந்து ஓரளவு வளர்ச்சியை எட்டும்.
எனவே, மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கடந்த காலங்களில், வறட்சி ஏற்பட்ட போது, அரசே, உலர் தீவ னங்களை வழங்கி விவசாயிகளுக்கு உதவியது.
தற்போதும் அதுபோன்ற ஒரு சூழல் உருவாகி வருவதால், உரிய ஆய்வு மேற்கொண்டு, தேவையான விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்றார்.

