/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பண்டிகைக்கு அரசு சிறப்பு பஸ்கள்
/
பொங்கல் பண்டிகைக்கு அரசு சிறப்பு பஸ்கள்
ADDED : டிச 28, 2025 07:01 AM
திருப்பூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, போக்குவரத்து கழகம், 12 முதல் 14ம் தேதி வரை ஒரு பகுதியாகவும், 18 மற்றும், 19ம் தேதி ஊர் திரும்புவதற்காகவும் சிறப்பு பஸ் இயக்க திட்டமிட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு பஸ் இயக்கத்துக்காக, தமிழகத்தின் எட்டு கோட்டங்கள், அவற்றின் கீழ் உள்ள மண்டலம், கிளைகளில் இருந்து கடந்தாண்டு எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு, அதில் எத்தனை பயணிகள் பயணித்தனர். டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், இயக்க குழு உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
நடப்பாண்டு எவ்வளவு பஸ் இயக்க வேண்டி இருக்கும் என்கிற விவரங்கள் கோட்ட மேலாண்மை இயக்குனர்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில், மாநிலம் முழுதும், 14 ஆயிரத்து 104 பஸ்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டு கோட்டம் வாரியாக பஸ்கள் நிலவரம் அறிந்து, விவரங்கள் தொகுக்கப்பட்ட பின், ஜன. மாத முதல் வாரத்தில் சென்னை மற் றும் பிற மாவட்டங்களில் இருந்து இயங்கும் சிறப்பு பஸ்கள் விபரம் அறிவிக்கப்படும்,' என்றனர்.

