/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்கள் l வெளிநாட்டு நிறுவனங்களை வெல்ல அரசின் 'கடைக்கண் பார்வை' தேவை
/
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்கள் l வெளிநாட்டு நிறுவனங்களை வெல்ல அரசின் 'கடைக்கண் பார்வை' தேவை
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்கள் l வெளிநாட்டு நிறுவனங்களை வெல்ல அரசின் 'கடைக்கண் பார்வை' தேவை
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்கள் l வெளிநாட்டு நிறுவனங்களை வெல்ல அரசின் 'கடைக்கண் பார்வை' தேவை
ADDED : ஆக 11, 2024 11:40 PM
திருப்பூர்:பின்னலாடை தொழில், கடந்த 40 ஆண்டுகளாக நம் நாட்டில் வேர் விட்டு வளர்ந்து இன்று ஆல மரமாகத் திகழ்ந்தாலும், உற்பத்தி இயந்திரங்களுக்கு சீனா போன்ற நாடுகளையே இன்றளவும் சார்ந்திருக்கிறோம்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தால், உள்ளூர் மற்றும் உள்நாட்டில் இயந்திரங்களை வடிவமைப்பது, வரும் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒரு பின்னலாடை தயாராக பல்வேறு துறைகள் பணியாற்றுகின்றன; அதிநவீன இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. நுாலிழையை துணியாக்கும் 'நிட்டிங்' இயந்திரம்; துணிக்கு சாயமிடும் இயந்திரம்; சலவை செய்த துணியின் சுருக்கத்தை போக்கி, உற்பத்திக்கு தயார்படுத்தும், 'காம்பாக்டிங்' மற்றும் 'ரைசிங்' இயந்திரம்; மதிப்பு கூட்டிய ஆடை உற்பத்திக்கு அடிப்படையாக இருக்கும், பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் இயந்திரம் உள்ளிட்ட 11 வகை இயந்திரங்கள் என சங்கிலித்தொடராக இணைந்து பின்னலாடை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், 10க்கும் மேற்பட்ட வகையிலான தையல் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
முதலிடத்தில் சீனா
பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் வடிவமைப்பில், சீனா இன்றும் முன்னோடியாக இருக்கிறது. ஜப்பான், தைவான், கொரியா போன்ற நாடுகள் இதற்கு அடுத்தடுத்த இடங்களை வகிக்கினறன.
பின்னலாடைத் தொழில், நம் தேசத்தில் கால்பதித்த, 40 ஆண்டுகளுக்கு பிறகே, தேவையான இயந்திரங்களை வடிவமைக்கும் முயற்சி துவங்கப்பட்டது.
'மேக் இன் இந்தியா'
இதன் காரணமாக, பின்னலாடைத்தொழில் மட்டுமல்ல, பல்வேறு தொழில்களும், புதிய தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட இயந்திரங்களுக்காக, சீனா போன்ற நாடுகளையே நம்பியிருக்கின்றன. மத்திய அரசு, கடந்த ஏழு ஆண்டுகளாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்கு வித்து வருகிறது. அதற்கு பிறகுதான், சாயமிடும் இயந்திரம்; நிட்டிங் இயந்திரம்; பிரின்டிங் இயந்திரம் போன்றவற்றை தமிழகத்தில் வடிவமைக்கும் முயற்சி துவங்கி, வெற்றிகரமாக மாறி வருகிறது.
புதிய தொழில்நுட்பத்தை 'அப்டேட்' செய்து, இயந்திரங்களை வடிவமைப்பதில், நாம் பின்தங்கித்தான் இருக்கிறோம். சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, தைவான் போன்ற நாடுகளே முன்னோடியாக இருக்கின்றன.
மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்ப அறிவு நிறைந்த நம் நாட்டு இளைஞர்களுக்குக் கரம் கொடுத்தால்தான், நமது தேவைக்கான இயந்திரங்களை நாமே வடிவமைக்கும் தன்னிறைவை எட்ட முடியும் என்கின்றனர் தொழில்துறையினர்.
இயந்திரச் செலவுகுறைந்தது
கடந்த சில ஆண்டு களாக, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கான இயந்திரங்கள், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில், தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது; இருப்பினும், தையல் இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். புதிய தொழில்நுட்பத்துடன் இயந்திர வடிவமைப்பு, வரும்காலத்தில் தான் நமது நாட்டில் முன்னேற்றம் பெறும். வெளிநாட்டு மெஷின்கள் தயாரிப்பதன் அடிப்படையில், புதிய தொழில்நுட்பத்தில் உள்ளூரில் தயாரிக்கும் இயந்திரங்களால், மூலதனம் மற்றும் பராமரிப்பு செலவு குறைந்துள்ளது.
- பாலச்சந்தர், துணைத்தலைவர்,
தென்னிந்திய பனியன்உற்பத்தியாளர் சங்கம் (சைமா)