/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனையில் காயலான் கடை 'குடோன்'
/
அரசு மருத்துவமனையில் காயலான் கடை 'குடோன்'
ADDED : நவ 19, 2024 06:27 AM

பல்லடம்; பல்லடம், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினசரி, 700க்கும் அதிகமான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். சமீபத்தில், டெல்லியில் இருந்து வந்த தேசிய தரச் சான்று குழுவினர், மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இச்சூழலில், மருத்துவமனை வளாகத்தில், திறந்த வெளியில், சேர், டேபிள், கட்டில், வீல் சேர்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடற்ற பழைய இரும்பு சாமான்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், மருத்துவமனை வளாகத்தில், பழைய இரும்பு கடை திறக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது. 2ஆண்டுகளுக்கும் மேல், இவை துருப்பிடித்து மக்கி வீணாவதுடன்,
இவற்றில், விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் இடமாகவும், மழைநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே, சேதமடைந்த பழைய இரும்பு சாமான்களை தேக்கி வைக்காமல், இவற்றை அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

