/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது
/
போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது
ADDED : ஜூலை 25, 2024 01:45 AM

காங்கேயம்: முத்துார், அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், முத்துார், கொடுமுடி சாலையில் அமைந்-துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில். 13 ஆண்டுகளாக 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழாசிரியராக பணியாற்றி வரு-பவர் முத்துாரை சேர்ந்த ரவிச்சந்திரன், 59. இவர் கடந்த மாதம், வகுப்பறையில் மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தும்போது, மாணவியரை உரசியதாகவும், கொச்சை வார்த்தை சொல்லி திட்டி-யதாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் மாணவியர் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசாருக்கு அளித்த புகார் அடிப்படையில், தமிழாசிரியர் ரவிச்சந்திரனை, காங்கேயம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் நேற்று கைது செய்தனர்.