/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி கே.ஜி., குழந்தைகளுக்கு பட்டமளிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
/
அரசு பள்ளி கே.ஜி., குழந்தைகளுக்கு பட்டமளிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
அரசு பள்ளி கே.ஜி., குழந்தைகளுக்கு பட்டமளிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
அரசு பள்ளி கே.ஜி., குழந்தைகளுக்கு பட்டமளிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
ADDED : ஏப் 11, 2025 10:18 PM

உடுமலை, ; உடுமலை அருகே, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கே.ஜி., வகுப்பு குழந்தைகளுக்கு நடந்த பட்டமளிப்பு விழா, பெற்றோரிடையே வரவேற்பை பெற்றது.
உடுமலை, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கட்டமைப்பு, இணை செயல்பாடுகள், தனித்திறன் வளர்த்தல், தற்காப்பு கலை பயிற்சி என பல்வேறு செயல்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர் வாயிலாக செய்து வருகின்றனர்.
இதனால், பெற்றோரிடமும் இப்பள்ளிக்கு தனிசிறப்பு உள்ளது. அரசு பள்ளிகளில் முன்மாதிரியாகவும் இப்பள்ளி உள்ளது.
பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. இந்த மையத்தில் கிண்டர் கார்டன் எனப்படும் கே.ஜி., வகுப்புகள் நடக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சின்னவீரம்பட்டி அரசு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
உடுமலை வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். தலைமையாசிரியர் இன்பக்கனி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சோமசுந்தரம், ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தலைமையாசிரியர் கூறுகையில், பெற்றோர் அரசு பள்ளியை நம்பி குழந்தைகளை சேர்க்கின்றனர். அதற்கேற்ப எங்களால் முடிந்தவரை பள்ளியின் தரத்தை தொடர்ந்து உயர்த்திக்கொண்டிருக்கிறோம். அதில் ஒரு சிறப்பு செயல்பாடுதான் இந்த பட்டமளிப்பு விழா. குழந்தைகள் பட்டம் பெறுவதை காண்பது பெற்றோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது,' என்றார்.

