/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்பு பகுதியில் 'பசுமை பாரதம்'
/
குடியிருப்பு பகுதியில் 'பசுமை பாரதம்'
ADDED : ஆக 28, 2025 11:38 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு சோளிபாளையம் விரிவாக்கம் மற்றும் வெங்கடேஷ்வா நகர் பகுதியில், 'பசுமை பாரதம்' என்ற தொலைநோக்கு பார்வையில், அவிநாசி குளம் காக்கும் அமைப்பு, சோளிபாளையம் விரிவாக்கம் மற்றும் வெங்கடேஸ்வரா குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து, மரம் வளர் விழா நடத்தின.
ஆசிரியை ரேணுகா தேவி, வரவேற்றார். வனம் இந்தியா பவுண்டேஷன் மற்றும் அவிநாசி குளம் காக்கும் இயக்கம் தலைவர் துரை, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முதற்கட்டமாக, 50 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, குடியிருப்போர் வாயிலாக நடப்பட்டன. 500 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, வளர்த்தெடுப்பது என, குடியிருப்புவாசிகள் உறுதியேற்றனர்.
நிகழ்ச்சியில், வேலுசாமி, வேல்முருகன், அருள்சாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியர் அதிகளவில் பங்கேற்றனர்; அவர்கள் மத்தியில், மரம் வளர்ப்பின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மாணவி ஸ்வாதி நன்றி கூறினார்.

