/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலக்கை தாண்டியும் தொடரும் பசுமை பயணம்; இன்று 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா
/
இலக்கை தாண்டியும் தொடரும் பசுமை பயணம்; இன்று 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா
இலக்கை தாண்டியும் தொடரும் பசுமை பயணம்; இன்று 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா
இலக்கை தாண்டியும் தொடரும் பசுமை பயணம்; இன்று 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா
ADDED : டிச 13, 2024 08:33 PM
உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் - 10 திட்டத்தின் கீழ், நடப்பாண்டு இலக்கை தாண்டி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கு நிறைவு விழா, உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் இன்று நடக்கிறது.
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வெற்றி' அமைப்பு சார்பில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த, 10 ஆண்டுகளில், மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்கள், பொது இடங்கள், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை வளாகங்கள் என பாதுகாப்பான இடங்களில், 21 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் பணி துவக்கப்பட்டது.
விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் ஆதரவால், மாவட்டத்தில், நடப்பாண்டு, நேற்று வரை, 3 லட்சத்து, 20 ஆயிரத்து, 665 மரக்கன்றுகள் வரை நடவு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 543 மரக்கன்றுகள் என, மாவட்டத்திலேயே உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இலக்கை தாண்டி மரக்கன்றுகள் நடவு பணி நடந்து வரும் நிலையில், 3 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கு நிறைவு விழா, உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், இன்று (14ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
சைனிக் பள்ளி முதல்வர் மணிகண்டன் தலைமையில், ஆனைமலை புலிகள் காப்பகம், வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, சென்னை எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்துார்பாரி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.