ADDED : ஆக 16, 2025 10:22 PM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், அரசு நிலம், கோவில் நலம் மற்றும் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங் களுக்கு பசுமை பந்தல் அமைப்பது போல், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. நிறுவன வளாகங்களில் உள்ள காலியிடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில், முன்னோடியாகவும் இருக்கின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. தலைமை ஆசிரியர் (பொ) மபேல் ஜான்சி விஜயகுமாரி, உதவி தலைமை ஆசிரியர் பழனிவேல், பசுமை குழு ஒருங்கிணைப்பாளர் சின்னப்பன் உள்ளிட்டோர், மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
புங்கன், வேம்பு, நெட்லிங்கம், துாங்கு வாகை என, தலா 20 மரக்கன்றுகள் வீதம், 80 மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டது. இத்திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.