/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமரத்தாணி பசுமை சார் உற்பத்தித்திறன்; வர்த்தகர் மனதில் பதியட்டும்
/
பசுமரத்தாணி பசுமை சார் உற்பத்தித்திறன்; வர்த்தகர் மனதில் பதியட்டும்
பசுமரத்தாணி பசுமை சார் உற்பத்தித்திறன்; வர்த்தகர் மனதில் பதியட்டும்
பசுமரத்தாணி பசுமை சார் உற்பத்தித்திறன்; வர்த்தகர் மனதில் பதியட்டும்
ADDED : நவ 18, 2024 06:42 AM
திருப்பூர் ; திருப்பூரின் பசுமை சார் உற்பத்தித்திறன் வர்த்தகர்கள் மனதில் பதிய வேண்டும். இதற்கான வாய்ப்பாக 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சி அமையும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி., ) சார்பில், 'பாரத் டெக்ஸ் -2025' என்ற ஜவுளி கண்காட்சி, வரும் பிப்., 14ல் துவங்கி 17 வரை நடக்கிறது. புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில், ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர். சர்வதேச வர்த்தகர்கள் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக, உலகம் முழுவதும் பசுமை சார் உற்பத்தி தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கண்காட்சிகளிலும் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி கோட்பாடுகள் மற்றும் திருப்பூரின் மறுசுழற்சி தொழில்நுட்ப சாதனைகளை பட்டியலிட்டு காட்சிப்படுத்தினர். வெளிநாட்டு வர்த்தகர்களும், திருப்பூருக்கு நேரில் வந்து, தொழிற்சாலைகளில் உற்பத்தி படிநிலைகளை பார்வையிட்டனர்.
இதனால், வழக்கமான ஆர்டர்களுடன், புதிய வர்த்தக நிறுவனங்களின் ஆர்டர்களும் திருப்பூருக்கு கிடைத்து வருகின்றன; மாதந்தோறும், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், 2வது 'பாரத் டெக்ஸ் -2025' ஜவுளி கண்காட்சியானது, தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
திருப்புமுனை தரும்
இரண்டாவது முறையாக நடக்கும் 'பாரத் டெக்ஸ் -2025' ஜவுளி கண்காட்சி, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கிய திருப்புமுனையாக அமையும். அதிக அளவு ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்க, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முயற்சி எடுத்துள்ளது.
செயற்கை நுாலிழை மற்றும் மறுசுழற்சி ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியதால், இந்தாண்டு ஏற்றுமதி ஆர்டர் வரத்து அதிகரித்தது. இரண்டாவது கண்காட்சியில், சர்வதேச வர்த்தகர்கள் பங்கேற்க இருப்பதால், திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி சாதனைகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.