/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை புரட்சி: வனத்துக்குள் திருப்பூர் திட்டத்துக்கு பாராட்டு; அமெரிக்கா வாழ் தமிழக மாணவர் பெருமிதம்

ADDED : ஜூலை 18, 2024 12:06 AM

திருப்பூர் : அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஈரோட்டை சேர்ந்த மாணவர், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்ப்பு குறித்து கேள்விப்பட்டு, மரம் வளர்ப்பு தொழில்நுட்பத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் மூலமாக, பயனுள்ள வகையில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 2015ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது; இதுவரை, 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்க்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்ட பணி துவங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் இடையன்காட்டு வலசுவை சேர்ந்த தம்பதியர் ரவிக்குமார் - மோகனசுந்தரி. இவர்களின் மகன் நிதின், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். சொந்த ஊர் வந்திருந்த நிதின், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டத்தில் மரம் வளர்ப்பது குறித்து கேள்விப்பட்டுள்ளார்.
அதன்படி, உடுமலை பகுதிகளுக்கு சென்று, திட்ட பணியாளர்களை சந்தித்த, மரம் வளர்ப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். தொடர்ச்சியாக, 15 இடங்களில் வளர்க்கும் மரங்களை நேரில் பார்த்தார்; போத்த நாயக்கனுாரில், ராஜூலட்சுமி என்பவர் நிலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய மரக்கன்றுகளை நட்டு வைத்து, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து நிதின் கூறுகையில்,''வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரம் வளர்ப்பது குறித்து கேட்டறிந்து, மூன்று நாட்கள், பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்தேன். மரக்கன்று உருவாக்குவது, நிலம் தேர்வு செய்வது, இலவசமாக நட்டு கொடுப்பது, அரசு சார் துறைகளுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவது பிரமிப்பாக இருக்கிறது. உலக நாடுகள், மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன. எதிர்கால சந்ததியினருக்காக, வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்த்து பசுமை புரட்சி செய்து வருவது பாராட்டுக்குரியது,'' என்றார்.
-------------------------
படவிளக்கம்:
உடுமலை, போத்தநாயக்கனுாரில், ராஜூலட்சுமி தோட்டத்தில், நிதின் மரக்கன்று நட்டு வைத்தார்.