/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலக்கை தாண்டியும் தொடரும் பசுமை பணி
/
இலக்கை தாண்டியும் தொடரும் பசுமை பணி
ADDED : ஜன 03, 2025 10:24 PM

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் - 10 திட்டத்தில், இலக்கை தாண்டியும் மரக்கன்றுகள் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பருவ மழை பொழிவு அதிகரித்ததோடு, விவசாயிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு காரணமாக, இலக்கை தாண்டியும் பசுமை பயணம் தொடர்கிறது.
நேற்று வரை, 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயிகள் ஆர்வம் காரணமாக, 2 லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கஞ்சம்பட்டி ஊராட்சி, கே.நாகூர் கிராமத்தை பசுமையாக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில், புங்கன், இயல்வாகை, சொர்க்கம், இலுப்பை, புளி, பூந்திகொட்டை, வேம்பு, பூவரசன் என மண்ணின் மரபு சார்ந்த, 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழாவிற்கு, ஊராட்சி தலைவர் மனோன்மணி செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.