/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் பண்ணையில் விரிவாகும் பசுமை
/
வேளாண் பண்ணையில் விரிவாகும் பசுமை
ADDED : டிச 08, 2024 02:51 AM

திருப்பூர்: வெற்றி அறக்கட்ட ளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம், கடந்த, 10 ஆண்டுகளில், 21 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, தாராபுரம் அருகேயுள்ள கோவிந்தாபுரத்தில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மாந்தியாபுரம் மகிழம் இயற்கை வேளாண் பண்ணையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
உரிமையாளர் அருண்பிரசாத் குடும்பத்தினர், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். வேளாண் பண்ணையில், 900 தேக்குமரமும், 40 வேம்பு மற்றும் 20 சந்தன மரக்கன்றுகள் என, 960 மரக்கன்றுகள் நடப்பட்டன. நேற்றுடன், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூன்று லட்சத்து, 11 ஆயிரத்து, 115 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க ஆர்வமுள்ளவர்கள், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.