ADDED : டிச 18, 2024 05:37 AM
திருப்பூர், : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க, மாநில நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின், மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அனைத்து மாவட்டங்களில் உள்ள, 6,200 பேர் ஓட்டளித்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த சசிக்குமார் மாநில தலைவராக வெற்றி பெற்றுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த குமார், மாநில பொதுசெயலாளராகவும், காஞ்சிபுரத்தை சேர்ந்த தியாகராஜன் பொருளாளராகவும், கடலுார் போஸ்கோ மாநில துணை தலைவராகவும், புதுக்கோட்டையை சேர்ந்த உதயசூரியன், விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பகாந்தன் ஆகியோர், மாநில செயலாளர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று முன்தினம் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.