/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத நல்லிணக்கம் வலியுறுத்தி மளிகை தொகுப்பு வழங்கல்
/
மத நல்லிணக்கம் வலியுறுத்தி மளிகை தொகுப்பு வழங்கல்
ADDED : மார் 21, 2025 02:11 AM

பல்லடம்: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, இஸ்லாமியர்களுக்கு, இப்தார் நோன்புக்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
பல்லடம், அருள்புரத்தில் உள்ள சாய் நவ்ஜீவன் அறக்கட்டளை சார்பில், மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயபிரபா நவீன் தலைமை வகித்தார். சின்னக்கரை ஜமாத் தலைவர் அப்பாஸ், முடுப்பரை அம்மன் கோவில் நிறுவனர் சிவசக்தி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ரமலான் பண்டிகைக்காக இப்தார் நோன்பு கடைப்பிடித்து வருவதை முன்னிட்டு நோன்புக்கான மளிகை தொகுப்புகள் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் கூறுகையில், 'அனைத்து மதத்திலும் அன்பை மட்டுமே போதிக்கிறோம். ஹிந்து கோவில்களுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொடுப்பதும், இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஹிந்துக்கள் பங்கேற்று சிறப்பிப்பதும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நடக்க வேண்டும். இதன் வாயிலாக, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் ஏற்படும்,' என்றனர். நிகழ்ச்சியில், பாலசுப்பிரமணியம், தமிழ்செல்வன், ரவி உட்பட, பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.