ADDED : அக் 23, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியில், நீலகிரி எம்.பி., ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில், 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நகராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, நகர செயலாளர் கிருஷ்ணசாமி, கவுன்சிலர் மதிவாணன் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர்கள், அங்கன்வாடி பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

