
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலூர்: கோவை, திருச்சி ரோடு, பொங்கலுார், கொசவம்பாளையத்திலிருந்து கொடுவாய் வரை செல்லும் ரோட்டில் செல்ல பிள்ளை பாளையம் குளம் உள்ளது. குளத்திற்கு வரும் நீர்வழித்தடத்தின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
அந்தப் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து, காரைகள் பெயர்ந்து, கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும் பொழுது, பாலம் இடியும் அபாயம் உள்ளது. எனவே, அந்தப் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

