ADDED : நவ 05, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், மணியம்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. அப்பள்ளியின் முன்புறமுள்ள கேட் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையும் அபாயம் உள்ளது.
பள்ளி முன்புறம் கொடுவாய் - நாச்சிபாளையம் ரோடு செல்கிறது. அதில் வாகன போக்குவரத்து அதிகம். திடீரென குழந்தைகள் விளையாடுவதற்காக வெளியே வந்தால் உயிருக்கு அபாயம் உள்ளது. எனவே இடிந்து கிடக்கும் பிரதான நுழைவு வாயில் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

