/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலத்தடி நீர் மட்டம் உயரணும்; திட்டக்குழு ஆலோசனை
/
நிலத்தடி நீர் மட்டம் உயரணும்; திட்டக்குழு ஆலோசனை
ADDED : நவ 14, 2024 11:39 PM
திருப்பூர் ; திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்படுத்தும் பொருட்டு, 'மழைநீரை குளம், குட்டை, பொது கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் செறிவூட்டும் திட்டக்குழு' ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், மூலனுார், உடுமலை, மடத்துக்குளம், பொங்கலுார், குண்டடம் மற்றும் குடிமங்கலம் ஆகிய, 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 4,179.94 எக்டர் பரப்பளவில் உள்ள, 1,149 குளம், குட்டைகளில் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு மற்றும் ஓடை பராமரிப்பு குறித்தும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,478 பொதுக் கிணறுகள் மற்றும், 1,410 ஆழ்குழாய் கிணறுகள் குறித்தும் விவரம் பெறப்பட்டது.
காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பாலசமுத்திரம் புதுார், படியூர், சிவன்மலை, கீரனுார், மரவப்பாளையம், ஆலம்பாடி, பரஞ்சேர்வழி, மருதுறை மற்றும் நத்தக்கடையூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், ஆர்.டி.ஓ.,க்கள் மோகனசுந்தரம், பெலிக்ஸ்ராஜா, குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.