/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப் - 2, 2 ஏ தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு
/
குரூப் - 2, 2 ஏ தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு
ADDED : ஜூலை 22, 2025 12:14 AM
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக ஏழாவது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், குரூப் தேர்வுகள் எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலு வலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை 2 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு; முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் பணியிடங் களுக்கான குரூப் 2ஏ தேர்வுகள் வரும் செப்., 28ல் நடைபெற உள்ளன.
திருப்பூரில் குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத அதிக பாடங்களை கற்க வேண்டியுள்ளதால், மாணவர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து படிப்பது உதவியாக இருக்கும். தேர்வர்கள், தாங்கள் கற்கும் பாடங்களில் சந்தேகங்கள் எழுந்தால், உடனுக்குடன் ஆசிரியர் களிடம் விளக்கம் கேட்டு, தெளிவு பெறவேண்டும்.
போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு, முழு ஈடுபாட்டுடன் படித்தால், நிச்சயம் வெற்றிபெறலாம்.
இதுவரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சேர்ந்து படித்த, 51 மாணவர்கள், குரூப் 2, 2 ஏ, குரூப் - 4 தேர்வுகளில் வெற்றிபெற்று, அரசு அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வைஷாலி மற்றும் குரூப் - 2, 2ஏ பயிற்சியில் இணைந்துள்ள மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

