/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று 'குரூப் -1' தேர்வு மாவட்டத்தில் 10 மையம்
/
இன்று 'குரூப் -1' தேர்வு மாவட்டத்தில் 10 மையம்
ADDED : ஜூன் 14, 2025 11:19 PM
திருப்பூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப்- 1 நிலை, போட்டித்தேர்வு, இன்று, மாநிலம் முழுவதும் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 4,303 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு தாலுகா எல்லையில் உள்ள, 10 மையங்களில், 16 ஹால்களில் தேர்வு நடக்க உள்ளது. காலை, 9:00 முதல், 12:30 மணி வரை தேர்வு நடக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் குமரன் கல்லுாரி, எல்.ஆர்.ஜி., கல்லுாரி, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, கிட்ஸ் கிளப் பள்ளி, ஏ.ஜி., கல்லுாரி, ஏஞ்சல் கல்லுாரி மற்றும் இடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், குரூப்-1 தேர்வு நடக்க உள்ளது. கண்காணிப்பு பணிக்காக, அரசு அதிகாரிகள் அடங்கிய நான்கு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,' என்றனர்.