/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு 17ல் துவக்கம்
/
குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு 17ல் துவக்கம்
குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு 17ல் துவக்கம்
குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு 17ல் துவக்கம்
ADDED : நவ 13, 2025 09:54 PM
உடுமலை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மை தேர்வுக்கு, பயிற்சி வகுப்புகள் வரும் 17ம் தேதி திருப்பூரில் துவங்குகிறது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணைய அறிவிக்கையின்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை- 2 போன்ற தொகுதி-2 அலுவலர்களுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் போன்ற தொகுதி - 2 ஏ பணிகளுக்கும் என மொத்தம், 645 காலிப்பணியிடங்களுக்கு கடந்த, செப்., 28ல், முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
தொடர்ந்து, முதன்மைத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, வேலைவாய்ப்பு அலுவலகம், தன்னார்வ பயிலும் வட்டத்தில், முதன்மை தேர்வுக்கான வகுப்புகள், வரும் 17ம் தேதி, காலை, 10:00 மணிக்கு அறை எண். 439-ல் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியின் போது, மாதம் இருமுறை மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள, தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421- -2999152, 94990 55944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம், என வேலைவாய்ப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

