/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்: கால்வாய் உடைப்பால் மாற்றம்
/
திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்: கால்வாய் உடைப்பால் மாற்றம்
திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்: கால்வாய் உடைப்பால் மாற்றம்
திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்: கால்வாய் உடைப்பால் மாற்றம்
ADDED : நவ 13, 2025 09:55 PM

உடுமலை: பி.ஏ.பி., நான்காம் மண்டலம், 4ம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பி.ஏ.பி., பாசனம், 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூலை, 27ம் தேதி, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
வரும், டிச., 9 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, 10 ஆயிரத்து, 250 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், மண்டல பாசன நிலங்களுக்கு, 21 நாட்கள் நீர் திறப்பு, ஏழு நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் நீர் வழங்கப்படும்.
நடப்பாண்டு பருவ மழைகள் திருப்தியாக பெய்து வருவதால், இடைவெளியின்றி, 4 சுற்றுக்களுக்கு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டது. வரும், 20ம் தேதி, 4ம் சுற்று நிறைவு பெற்றாலும், திருமூர்த்தி அணை நீர்இருப்பு உயர்ந்து காணப்படுவதால், 5ம் சுற்றுக்கும் தொடர்ந்து நீர் வழங்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று பல்லடம் வாவிபாளையம் அருகே, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக, திருமூர்த்தி அணையிலிருந்து நேற்று காலை, 9:00 மணிக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. உடுமலை கால்வாயில் மட்டும் வினாடிக்கு, 51 கனஅடி நீர் திறக்கப்பட்டு, இரு நாட்கள் வழங்கப்படும். பிரதான கால்வாய் பணி முடிய ஒரு வாரம் வரை ஆகும் என்பதால், ஒரு வாரத்திற்குப்பிறகே, பாசனத்திற்கு மீண்டும் நீர் திறக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

