/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிலுக்காக திருப்பூரில் வழிகாட்டி மையம்
/
பின்னலாடை தொழிலுக்காக திருப்பூரில் வழிகாட்டி மையம்
பின்னலாடை தொழிலுக்காக திருப்பூரில் வழிகாட்டி மையம்
பின்னலாடை தொழிலுக்காக திருப்பூரில் வழிகாட்டி மையம்
ADDED : ஆக 03, 2025 02:30 AM

திருப்பூர்,:பின்னலாடை தொழிலில் கால் பதித்துள்ள தொழில்முனைவோருக்கு வழிகாட்டவும், புதிய தொழில்முனைவோர் உருவாக ஊக்குவிக்கவும், 'மூன்றாவது கண்' என்ற வழிகாட்டி மையம் திருப்பூரில் துவங்கப்பட உள்ளது.
திருப்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், புதிய தொழில்முனைவோராக வருவது அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆடை வடிவமைப்பு, துணி 'கட்டிங்' மற்றும் ஆடை தைப்பது, பிரின்டிங், எம்ப்ராய்டரிங் என, பல்வேறு பிரிவுகளை கடந்து வர வேண்டியுள்ளது.
தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் வகையில், திருப்பூரில் 'மூன்றாவது கண்' என்ற வழிகாட்டி மையம் அமைக்க, 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பு களமிறங்கியுள்ளது.
தொழில் அமைப்புகள் மற்றும் 'வால்ரஸ், மேகலா மெஷின்ஸ்' போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி மையம் அமைக்கும் பணி வேக மெடுத்துள்ளது.
ஆடை தயாரிப்புக்கான 'பேட்டர்ன்' தயாரிப்பது, டிசைன் செய்வது துவங்கி, 'பேப்ரிக்' துணியை 'கட்டிங்' செய்வது, ஆடை வடிவமைப்பு, பிரின்டிங், எம்ப்ராய்டரிங், பேக்கிங் என, அனைத்து பணிகளையும், ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ளலாம்.
தற்போதைய நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கான, 'சாம்பிள்' தயாரிப்பதற்கும், இத்தகைய மையம் உறுதுணையாக இருக்கும்.