sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடை உற்பத்தியாளர்களுக்காக வழிகாட்டி சேவை மையம் ! 'பேட்டன்' முதல் 'பேக்கிங்' வரை  'சாம்பிள்' தயாரிப்பு இனி எளிதாகும்

/

ஆடை உற்பத்தியாளர்களுக்காக வழிகாட்டி சேவை மையம் ! 'பேட்டன்' முதல் 'பேக்கிங்' வரை  'சாம்பிள்' தயாரிப்பு இனி எளிதாகும்

ஆடை உற்பத்தியாளர்களுக்காக வழிகாட்டி சேவை மையம் ! 'பேட்டன்' முதல் 'பேக்கிங்' வரை  'சாம்பிள்' தயாரிப்பு இனி எளிதாகும்

ஆடை உற்பத்தியாளர்களுக்காக வழிகாட்டி சேவை மையம் ! 'பேட்டன்' முதல் 'பேக்கிங்' வரை  'சாம்பிள்' தயாரிப்பு இனி எளிதாகும்


UPDATED : அக் 14, 2025 02:11 AM

ADDED : அக் 14, 2025 12:54 AM

Google News

UPDATED : அக் 14, 2025 02:11 AM ADDED : அக் 14, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:புதிய தொழில்முனைவோர், குறு, சிறு ஆடை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், ஒரே கூரையின் கீழ், 'பேட்டன்' துவங்கி, 'பேக்கிங்' வரையிலான பணிகளை செய்யும், வழிகாட்டி சேவை மையம் திருப்பூரில் அமைகிறது.

திருப்பூரில், 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இயங்குகின்றன. பின்னலாடை தொழிலில், பல்வேறு 'ஜாப் ஒர்க்'கள் இடம்பெற்றுள்ளன. ஒரு வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, 10 முதல் 20 'சாம்பிள்' ஆடைகள் தயாரிக்க வேண்டியுள்ளது.

பெரிய நிறுவனங்களில் மட்டும், ஆடை வடிவமைப்பு டிசைன் செய்யும் வசதி துவங்கி, அனைத்து வசதிகளும் இருக்கும்; ஆனால், நடுத்தர மற்றும் குறு, சிறு நிறுவனங்கள், 'பேட்டன்' தயாரிப்பது, ஆடை டிசைனிங், கட்டிங், எம்ப்ராய்டரிங், பிரின்டிங் என, பல்வேறு இடங்களில் 'ஜாப் ஒர்க்' கட்டண அடிப்படையில் பணிகளை செய்கின்றனர்.

'சாம்பிள்' ஆடை சவால் ஏற்றுமதியாளர், உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளருக்கு , 'சாம்பிள்' ஆடை தயாரிப்பது பெரிய சவாலாக மாறியுள்ளது. அதிக பொருள் விரயம் ஏற்படுவதுடன், காலவிரயமும், அலைச்சலும் ஏற்படுகிறது.

புதிய தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 'சாம்பிள்' ஆடை உற்பத்திக்கான, வழிகாட்டி சேவை மையம் அமைக்கப்படுகிறது. திருப்பூர், ஸ்ரீநகர் பகுதியில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும், 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பும், மேகலா மெஷின்ஸ் நிறுவனம் இணைந்து, இதை அமைக்கின்றன.

அனைத்து வசதிகளுடன்... ஆடை டிசைனிங் மற்றும் 'பேட்டர்ன்' தயாரிப்புக்காக மையம்; துணியை 'கட்டிங்' செய்யும் மெஷின், எம்ப்ராய்டரிங் மற்றும் பிரின்டிங் மெஷின், ஆடை வடிவமைப்பு, 'பேக்கிங்' என, அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மொத்தம், 20 ஆயிரம் சதுரடியில், கட்டுமான பணி முடிந்துள்ளது; வரும் வாரங்களில், இயந்திரங்களை நிறுவும் பணி துவங்க உள்ளது.

ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் மிக குறைந்த அளவு, துணியை 'கட்டிங்' செய்ய, திருப்பூரில் போதிய வசதி இல்லை; மொத்தமாக மட்டுமே செய்து கொடுக்கின்றனர். சேவை மையத்தில், 10 ஆடைகளுக்கு கூட, கட்டிங் செய்யலாம். 'சாம்பிள்' ஆடை தயாரிக்க, 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கால அவகாசம் தேவைப்பட்டது. வழிகாட்டி மையம் அமைந்தால், அதிகபட்சம் 2 மணி நேரத்தில் ஆடை தயாரித்துவிடலாம்; செலவும், 80 சதவீதம் குறையும். தினமும், 300 நபர்கள் வரை, இம்மையத்தை பயன்படுத்தலாம். ஆடை தயாரிப்பை எளிமையாக்க, 'பாண்டிங்' என்ற, தையல் இல்லாமல் ஆடை வடிவமைக்கும் இயந்திரங்களும் பொருத்தப்படும். வரும், ஜன., மாதத்தில் இருந்து, ஆடை உற்பத்திக்கான வழிகாட்டி சேவை மையம் முழு பயன்பாட்டுக்கு வரும்; டிச., மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 'சாம்பிள்' தயாரிக்க மட்டுமல்ல; 'ஜாப்ஒர்க்' அடிப்படையிலும், இம்மையத்தை, குறு, சிறு உற்பத்தியாளர் மற்றும் புதிய தொழில்முனைவோர் பயன்படுத்தலாம். -'வால்ரஸ்' டேவிட், இயக்குனர், வழிகாட்டி சேவை மையம், திருப்பூர்.






      Dinamalar
      Follow us