/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்டு இருமலால் நாய்கள் பாதிப்பு: சிகிச்சைக்கு வழிகாட்டுதல்
/
வறட்டு இருமலால் நாய்கள் பாதிப்பு: சிகிச்சைக்கு வழிகாட்டுதல்
வறட்டு இருமலால் நாய்கள் பாதிப்பு: சிகிச்சைக்கு வழிகாட்டுதல்
வறட்டு இருமலால் நாய்கள் பாதிப்பு: சிகிச்சைக்கு வழிகாட்டுதல்
ADDED : ஆக 07, 2025 07:48 PM
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் பராமரிக்கப்படும் நாய்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், வறட்டு இருமல் நோய்க்கான சிகிச்சை மேலாண்மை முறைகள் குறித்து, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், தற்போதைய சீசனில், வளர்ப்பு பிராணிகளுக்கு பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படுகிறது. குறிப்பாக, நாய்களுக்கு வறட்டு இருமலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்நோய்க்கான சிகிச்சை மேலாண்மை முறைகள் குறித்து, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
நாய்களின் மேல் சுவாச மண்டலத்தை வறட்டு இருமல் தொற்று நோய் பாதிக்கிறது. 'பார்டட்டல்லா பிராங்கி செப்டிகா' எனப்படும் நுண்ணுயிரி, சிலநேரங்களில் 'பாரா இன்பிளுயன்சா', அல்லது 'கொரோனா' எனப்படும் நச்சுயிரி வாயிலாக இந்த தொற்று ஏற்படுகிறது. இது ஆங்கிலத்தில் 'கென்னல் காப்' எனப்படுகிறது.
முக்கிய அறிகுறிகளாக, வறட்டு இருமல் பின்பு கோழை போன்ற திரவத்தை வாந்தி எடுப்பது அல்லது தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் பாதிக்கப்பட்ட நாய் இருமலை ஏற்படுத்தும். காய்ச்சல், பசியின்மை மற்றும் உடல் சோர்வு போன்றவை இதர அறிகுறிகள் ஆகும்.
மேலும் பாதிக்கப்பட்ட நாய்க்கு, 'ட்ரமடால்' 'டாக்ஸி சைக்கிளின்' எனப்படும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்படி வழங்கலாம். சிகிச்சை மேற்கொள்ளாத நாய்களுக்கு, இவ்வகையான வறட்டு இருமல் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கலாம்.
இன்னும் சில நோய், எதிர்ப்பு சக்தி குறைந்த செல்லப் பிராணிகளுக்கு, ஒருமாதம் வரை கூட இந்நோயின் தாக்கம் இருக்கும். இதற்கான தடுப்பூசிகள் பரிந்துரைப்படி செலுத்தினால், செல்லப்பிராணிகளை பாதுகாக்கலாம் என கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவவியல் துறை உதவி பேராசிரியர் இன்பராஜ் தெரிவித்தார்.