sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆன்மிகப் பயணத்துக்கு வழிகாட்டும்

/

ஆன்மிகப் பயணத்துக்கு வழிகாட்டும்

ஆன்மிகப் பயணத்துக்கு வழிகாட்டும்

ஆன்மிகப் பயணத்துக்கு வழிகாட்டும்


ADDED : டிச 29, 2024 08:13 AM

Google News

ADDED : டிச 29, 2024 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சுதம் பேட்டையில், 'அச்சம் போக்கும் அங்காளபரமேஸ்வரி'; ஆதலையூரில், 'கரிகாலன் வழிபட்ட கருணாமூர்த்தி'; கீழ்க்குறிச்சியில் 'சொத்துக்களை வழங்கும் சோமசுந்தரர்' என, கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள, சிறப்பு வாய்ந்த, 46 கோவில்களின் வரலாற்றை விளக்கும், 'கும்பகோணம் வட்டார கோயில்கள்' என்ற புத்தகத்தை, 'தினமலர்' குழுமம், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது.

'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வர். இதில், கும்பகோணத்துக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு' என்கிறார், எழுத்தாளரும், இந்நுாலின் ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார்.

பரிகார தலங்கள்


'ஊழிக்காலத்தில் உலகமெலாம் நீரில் மூழ்கிய போது, கும்பம் வந்து கரை சேர்ந்த இடம் கும்ப கோணம்'. அத்தகைய கும்பகோணம் வட்டாரத்தில், பிரசித்தி பெற்ற கோவில்கள் அனேகம் இருந்தாலும், வெளியே தெரியாத பரிகார தலங்கள் பல இருக்கின்றன.

வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும், ஆன்மிக புருஷர்கள் அவதரித்த தலங்களை நேரில் தரிசனம் செய்து, கோவில் விவரங்களை புத்தகமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

ஆதலையூர் சூரியகுமார் நம்மிடம் பகிர்ந்தவை...

ஒவ்வொரு கோவிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது. தல வரலாறு மட்டும் அல்லாமல், கோவிலின் பரிகார முறைகள், வழிபாட்டு முறைகள் என்று நம்மை வசீகரிக்கும் தகவல்கள் அதிகம் உள்ளன. 'மகிமாலை' என்ற இடத்தில் உள்ள கோவில் வெளிப்புறம், மூன்றாம் பிறையை வழிபட, பிறை போன்ற பீடம் அமைத்துள்ளனர். சோழ மன்னர்கள் முடிசூடும் இடமாக, 'துக்காச்சி' இருந்துள்ளது.

இதுவரை வெளிவராத தகவல்களுடன், 46 கோவில்களின் தகவல்களையும், சிறப்பையும் அளித்திருக்கிறோம். இதை படிக்கும் போது, நிச்சயமாக, பல ஆன்மிகத் தலங்களுக்கு புனித யாத்திரை சென்று வந்த திருப்தி கிடைக்கும். இந்நுால் உருவாக, தாமரை பிரதர்ஸ் மீடியா ஊக்கம் அளித்தது. கோவில் சென்றுவர ஏதுவாக, தொடர்பு எண்களும் அளித்துள்ளோம்.

திருமூலர் ஸ்தாபித்த கணபதி கோவில் (இரண்டாம் கட்டளை), 'பசி போக்கும் பரமன்' (திருச்சோற்றுத்துறை), 'பேச்சாற்றல் பெருக்கும் பெருமான்' (ஆடுதுறை சாத்தனுார்),' 'கடன்களை தீர்க்கும் கந்தன் ஆலயம் (பெரம்பூர்), 'புதிய தொழிலுக்கு பூரண அனுமதி (சாக்கோட்டை), மருத்துவராய் வந்த மகேசன் (மாத்துார்) என, வெளிவராத தகவல்களுடன், 'கும்பகோணம் வட்டார கோயில்கள்' என்ற புத்தகத்தை வழங்கியிருக்கிறோம்.

கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரஹ கோவில்கள், பஞ்சவாரண்ய தலங்கள் என, பார்க்கும் திசையெல்லாம் பக்தி மணம் பரப்பும் வகையில், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் ஆயிரமாயிரம் கோவில்களை கட்டி வைத்துள்ளனர்.

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உண்டு. அவ்வகையில், 'கும்பகோணம் வட்டார கோயில்கள்' புத்தகம் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.

இந்த புத்தகம் தேவைப்படுவோர், 1800 425 7700 (டோல்ப்ரீ எண்) மற்றும் 75500 09565 (வாட்ஸ்ஆப் மட்டும்) ஆகிய எண்களில், காலை 7:00 முதல், இரவு 7:00 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

பரிகாரம் எதற்காக?

''பரிகாரம் என்பது, மண்ணியல், சூழலியல், வானியல் சார்ந்தது; குறித்த காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் பரிகாரம் செய்யும் போது, அவை அறிவியல் ரீதியாக உடலியல் மாற்றங்கள், சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தும்'' என்று கூறுகிறார் ஆதலையூர் சூரியகுமார்.






      Dinamalar
      Follow us