/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹெராயின் விற்ற 3 பேர் மீது 'குண்டாஸ்'
/
ஹெராயின் விற்ற 3 பேர் மீது 'குண்டாஸ்'
ADDED : ஜூலை 09, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னத்துார்; குன்னத்துார் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொது மக்கள் அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு சென்ற போலீசார் ஹெராயின் போதைப்பொருளை விற்க முயன்ற மங்கலம் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த உமர் பரூக், 35, முசாமில், 21, ரசிதில்அக், 29, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூன்று பேர் மீதும் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் பரிந்துரையின்படி, கலெக்டர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

