/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமி மீது 'குண்டாஸ் '
/
ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமி மீது 'குண்டாஸ் '
ADDED : ஜூலை 18, 2025 11:54 PM
திருப்பூர்; அவிநாசி அடுத்த தெக்கலுாரில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு லாரியில் ரேஷன் அரிசி கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து கடந்த மாதம் அங்கு சோதனை நடத்தினர்.
திண்டுக்கலிலிருந்து லாரியில் கொண்டு வந்த 21 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இதைக் கடத்தி வந்த கோவையைச் சேர்ந்த பொன் ரமேஷ், 49; தாராபுரம் செந்தில்குமார், 42; அவிநாசி பத்மநாபன், 40 ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், பொன் ரமேஷ் தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் கலெக்டர் உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் இந்த உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.