ADDED : நவ 21, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: திருப்பூர், தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள கொடுவாய் பகுதியில், வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.
வெளியூர் நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் குட்கா, ஹான்ஸ் என போதை பொருட்கள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. ஒரு பாக்கெட்டுக்கு பதினைந்து மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். கொடுவாயிலிருந்து பிறப்பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு 'குட்கா' விற்பனை அதிகரித்துள்ளதால், எஸ்.பி. சாட்டையை சுழற்றி, போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

