/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழியை தேடுவது நிரந்தர தீர்வாகுமா?
/
பாறைக்குழியை தேடுவது நிரந்தர தீர்வாகுமா?
ADDED : நவ 21, 2025 06:26 AM
திருப்பூர்: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், பல்லடம் எம்.எல்.ஏ. ஆனந்தன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் மாநகர பகுதி முழுவதும், நுாற்றுக்கும் மேற்பட்ட குப்பை மேடுகள் உருவாகி வருகின்றன.
குப்பை அகற்றுவதற்கு நிரந்தர திட்டங்களை உருவாக்காமல், தற்காலிகமாக ஏதேனும் ஒரு பாறைக்குழியை தேர்வு செய்து குப்பை கொட்டுவது, மக்களுக்கு பெரும் இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது; தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வாகமோ, 60 வார்டுகளிலும் குப்பை அகற்ற ஒப்பந்தம் போட்டுள்ள தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த பிரச்னையில், மக்கள் பக்கம் நிற்கவேண்டிய மாநகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும், அ.தி.மு.க. மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தாலும்கூட, குப்பை பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களுக்காக களமிறங்கி போராடும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடவேண்டும்.
மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு, முறையான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல் படுத்த வேண்டும்.

