/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் ரிதன்யா பெற்றோருக்கு ஆறுதல்
/
ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் ரிதன்யா பெற்றோருக்கு ஆறுதல்
ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் ரிதன்யா பெற்றோருக்கு ஆறுதல்
ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் ரிதன்யா பெற்றோருக்கு ஆறுதல்
ADDED : ஜூலை 30, 2025 10:12 PM

அவிநாசி; கடந்த மாதம் 28ம் தேதி, அவிநாசி கைகாட்டிப் புதுாரை சேர்ந்த ரிதன்யா, திருமணமான 78 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன், கணவர் குடும்பத்தார் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாகவும், தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது தந்தைக்கு 'வாட்ஸ் அப்'பில் ஆடியோ மெசேஜ் அனுப்பினார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேவூர் போலீசார், ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்தனர்.
ரிதன்யாவின் பெற்றோரை நேற்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மத்திய அரசு ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவரும், பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய துணை தலைவர் முனாவரி பேகம் ஆறுதல் கூறினார்.
முனாவரி பேகம் கூறுகையில், ''ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினர் செய்த கொடுமைகள் கடவுளுக்கும் அடுக்காது. இனி இதுபோன்று எந்தப்பெண்ணுக்கும் நிகழக்கூடாது. ரிதன்யா கணவர் குடும்பத்தாருக்கு தகுந்த தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்' என்றார்.
நீலகிரி லோக்சபா பா.ஜ., இணை பொறுப்பாளர் கதிர்வேலன் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.

