/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதியில் நிறுத்தப்பட்ட பூங்கா பணி; சிதிலமடையும் கட்டமைப்புகள்
/
பாதியில் நிறுத்தப்பட்ட பூங்கா பணி; சிதிலமடையும் கட்டமைப்புகள்
பாதியில் நிறுத்தப்பட்ட பூங்கா பணி; சிதிலமடையும் கட்டமைப்புகள்
பாதியில் நிறுத்தப்பட்ட பூங்கா பணி; சிதிலமடையும் கட்டமைப்புகள்
ADDED : செப் 30, 2024 11:08 PM

உடுமலை : உடுமலையில், பூங்கா பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், புதர் மண்டி காணப்படுவதோடு, நிதி வீணாகி வருகிறது.
உடுமலை, எம்.பி., நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், சிறப்பு திட்டத்தின் கீழ் பூங்கா பணிகள் துவங்கின. இத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சுவர், அலங்கார வளைவு, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நீரூற்று, நடை பயிற்சி பாதை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், பணி துவங்கி, இரு ஆண்டுகளாகியும், பூங்காக்களில் பணிகள் நிறைவு செய்யப்படாமல், ஒரு சில பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பூங்கா ஒதுக்கீட்டு இடங்களில், செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. நிதி செலவழித்து கட்டப்பட்ட கட்டமைப்புகளும், சிதிலமடைந்து வீணாகி வருகிறது. எனவே, நகராட்சியில் பூங்கா பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.