/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை அரையாண்டு தேர்வு துவக்கம்
/
நாளை அரையாண்டு தேர்வு துவக்கம்
ADDED : டிச 09, 2025 08:14 AM
திருப்பூர்: நாளை (10ம் தேதி) அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு அரையாண்டு தேர்வு துவங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு, 10ம் தேதி தமிழ், 12ம் தேதி ஆங்கிலம், 15ம் தேதி கணிதம், 18ம் தேதி அறிவியல், 22ம் தேதி சமூக அறிவியல், 23ம் தேதி விருப்பமொழி பாடத்தேர்வு நடக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு அரையாண்டு தேர்வு வரும், 15 முதல், 23 வரை நடக்கிறது.
காலை 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை, ஒன்று, மூன்று, ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கும், இதே நாளில் இரண்டு மற்றும் நான்காம் வகுப்பு குழந்தைகளுக்கு மாலை 2:00 முதல் 4:00 மணி வரை தேர்வு நடைபெறும். நடுநிலைப்பள்ளிகளுக்கு, 15 முதல், 23 வரை தேர்வு நடக்கிறது.
வினாத்தாள்களை இன்று பதிவிறக்கம் செய்து, சரிபார்க்க வேண்டும். நாளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்கிய பின் முத்திரையிடப்பட்ட கவர்களைப் பிரித்து, தேர்வறைக்கு வழங்க வேண்டும். தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை இன்றைக்கு முடித்து விட, பள்ளி தலைமை ஆசிரியர், தேர்வு நடத்து பொறுப்பு ஆசிரியர் குழுக்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

