/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துவக்கப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு
/
துவக்கப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு
ADDED : டிச 16, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நேற்று துவங்கியது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும், நடுநிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் அரையாண்டு தேர்வு சில நாட்களுக்கு முன்பே துவங்கியது. நேற்று துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு துவங்கியது.
கல்வித்துறையின் சார்பில், வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தேர்வு நடக்கிறது. முதல் தேர்வாக தமிழ் தேர்வு நடந்தது. தேர்வுகள் வரும் 23ம் தேதியுடன் நிறைவடைந்து, அரையாண்டு தேர்வு விடுமுறை ஆரம்பமாகிறது.